கோவையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பா.ம.க மாநில பொருளாளர் திலகபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுவதாகவும், குற்றவாளிகள் யார் என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கரூரில் நடந்த சம்பவத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டதுபோல், கோவை சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்று முதல்வர் மன்னிப்பு கேட்பது அவசியம் என்றும் திலகபாமா வலியுறுத்தியுள்ளார்.