கோவை வழக்கறிஞர் நவேஷ் ராஜ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தம்பதியினர் கிரிஷ்–ஐஸ்வர்யா ரகு மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆபாச காணொளிகள் வெளியிட்டு, வெளிநாட்டு ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்தி இளைஞர்கள், சிறுவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.