கோவை: சவுரி பாளையத்தில் பகல் நேர கொள்ளை முயற்சி

62பார்த்தது
கோவை: சவுரி பாளையத்தில் பகல் நேர கொள்ளை முயற்சி
கோவை, சவுரிபாளையத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் 50 வயது பெண், நேற்று அன்னை வேளாங்கண்ணி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் அவரிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். பெண்ணிடம் தங்கச் சங்கிலி இல்லாததை கண்ட அந்த வாலிபர் ஆத்திரமடைந்து பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி, சிங்காநல்லூரை சேர்ந்த அசோக்குமார் (35) என்பவரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சவுரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி