கோவை: தொழில் வரியை ரத்து செய்ய கோரிக்கை

66பார்த்தது
கோவை: தொழில் வரியை ரத்து செய்ய கோரிக்கை
தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள், கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமக் கட்டணம் மற்றும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஆறுசாமி, செயலாளர் சரவணகுமார், பொருளாளர் குணசேகரன், மாநகர தலைவர் ராமசாமி, செயலாளர் மகேந்திரன், பொருளாளர் வேலுச்சாமி வேல்முருகன் மற்றும் மேட்டுப்பாளையம் நகர நிர்வாகிகள் நேருகுமார், காளியப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர். 

அந்த மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,000 சலூன் கடைகளும், ஊரக பகுதிகளில் 2,000 சலூன் கடைகளும் இயங்கி வருவதாகவும், இதுவரை தங்கள் கடைகளுக்கு உரிமக் கட்டணம் மற்றும் தொழில் வரி விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போது மாநகராட்சி பகுதியில் உரிமக் கட்டணமாக ரூ. 1,000 மற்றும் தொழில் வரியாக கடையில் உள்ள ஒரு இருக்கைக்கு ரூ. 3,000 வீதம் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும் என்று கூறுவதாக அவர்கள் கூறினர். 

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உரிமக் கட்டணம் மற்றும் தொழில் வரி கட்டவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி