கோவை: பெற்றோரை இழந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை

81பார்த்தது
கோவை: பெற்றோரை இழந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் கவுதம் (21), தனது பெற்றோர்கள் அடுத்தடுத்து சில மாத இடைவெளியில் மரணமடைந்த துக்கத்தில் இருந்துள்ளார். முதலில் தாய் சாந்தி மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தாயின் இழப்பைத் தாங்க முடியாமல் ரவிச்சந்திரனும் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தந்தையையும் இழந்த கவுதம் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

 உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சரிவர பேசாமல் வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி