பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவில்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துகிருஷ்ணன் (வயது 29) என்பவர், குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.