கோவையில் வெள்ளோடு அருகே கனகபுரத்தில், வளர்ப்பு நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் நாய் கடித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.