கோவை: குளக்கரையில் போதை உபகரணங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி

2பார்த்தது
கோவை பேரூர் குளக்கரையில் பயன்படுத்தப்பட்ட போதைப்பொருள் உபகரணங்கள் குவிந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்ஸ்டிக், டார்ச் லைட் போன்ற தோற்றத்தில் மறைவு வடிவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், மெத்தம்பெட்டமைன், போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்பாடும் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மரங்கள் நடும் இடத்தில் சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு, தராசு, வாட்டர் கேன் போன்ற உபகரணங்களையும் வீசிச் சென்றுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தல் எனக்கூறி, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி