கோவை: என். ஐ. ஏ. அதிகாரிகள் என கூறி முதியவரிடம் மிரட்டல்

456பார்த்தது
கோவை: என். ஐ. ஏ. அதிகாரிகள் என கூறி முதியவரிடம் மிரட்டல்
கோவை, 72 வயது முதியவரிடம் தன்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள் என கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாகவும், அபராதம் செலுத்தவில்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் முதியவர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். டிஜிட்டல் கைது என்ற ஒன்று இல்லை என்றும், குற்ற வழக்குகளில் அபராதம் வசூலிப்பது கிடையாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி