கோவை; அளவுக்கு மீறி மது அருந்திய எலக்ட்ரீசியன் சாவு

63பார்த்தது
கோவை; அளவுக்கு மீறி மது அருந்திய எலக்ட்ரீசியன் சாவு
கோவை ஒண்டிப்புதூர் குரும்பர் வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (33). எலக்ட்ரீசியன். திருமணமாகாத இவர் குடிப்பழக்கம் உடையவர். தனியாக வசித்து வந்த சம்பத்குமார் கடந்த 17ம் தேதி இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

 இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அங்கு சென்று பார்த்தபோது சம்பத்குமார் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்தனர். அதில் அளவுக்கு அதிகமான மது போதையில் சம்பத்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.