கோவை சுண்டக்காமுத்தூர் அருகே மேற்கு புறவழிச்சாலை பகுதியில் விதிமீறி தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாலையோரங்களில் குவியும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன், மண் மற்றும் நீர்வளமும் மாசடைந்து வருகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள், ஆடுகள் குப்பை உண்பதால் நோய்தொற்று ஏற்பட்டு, கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வனவிலங்குகள் பாதிப்பு குறித்தும் வனத்துறையினர் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் குப்பை கொட்டல் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சட்டவிரோத குப்பை கொட்டலை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.