கோவை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி விவசாயிகள் மனு

194பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள புதிய வழிபாட்டுத் தலங்களை அகற்றி, கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர், எம். எல். ஏ சுகுமார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைக்காலங்களில் நீர் வெளியேற முடியாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், நீர்வளங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி