விபத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்த ஐந்து நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த பயிற்சி முகாமை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி துவக்கி வைத்தார். முகாமில், உயர்ந்த கட்டிடங்கள், செல்போன் டவர்கள், மலைகள், உயரமான மரங்கள், அபார்ட்மெண்ட்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் கோவை மாவட்ட தீயணைப்பு துறையைச் சேர்ந்த 20 வீரர்கள் மற்றும் இரண்டு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறுகையில், வீரர்கள் உயரமான டவர்கள், அபார்ட்மெண்ட்கள், உயரமான கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.