கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 15 ஆம் தேதி தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு, உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை, குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வந்து விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு இது என தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.