கோவை விமான நிலையம் அருகே 21 வயது கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில், சிகிச்சை பெற்ற மாணவி மற்றும் அவருடைய காதலன் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினர். இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ், கார்த்திக் (காளீஸ்வரன்), தவசி ஆகிய மூவரையும் பீளமேடு போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கட்டுப்படுத்தி கைது செய்திருந்தனர். கால் காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் தவசி மற்றும் சதீஷ் குணமடைந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். கார்த்திக்குக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடித்து வீடு திரும்பிய மாணவிக்கும் காதலனுக்கும் பாதுகாப்பு காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கார்த்திக் குணமடைந்து சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர் மூவரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.