கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட 2 சகோதரர்கள் உட்பட 3 பேர், துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். சதீஷ், காளி, மற்றும் குணா ஆகியோர் இருகூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். மது அருந்தும் போது, காரில் காதல் ஜோடியை பார்த்ததாகவும், காருக்குள் அவர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததால் சபலம் ஏற்பட்டு கார் கண்ணாடியை உடைத்து மாணவியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.