கோவை: குப்பை கிடங்கு துர்நாற்றம் - கவுன்சிலர்கள் போராட்டம்

0பார்த்தது
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகியோர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கட்சி துண்டால் முகத்தை மூடி கூட்ட அரங்கின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துர்நாற்றம் கோவை புதூர் வரை அடிப்பதாகவும், குப்பை அகற்றும் பணிக்கு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கிய நிலையில் மாநகராட்சி வாகனங்கள் வாங்குவது மற்றும் ரூ. 25 கோடி செலவு செய்வது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களுக்கு சி. பி. ஐ விசாரணை கோரினர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 119 தீர்மானங்களில் 118 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் தெரிவித்தார். 64வது தீர்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட 55 சமுதாயக் கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களை தனியாருக்கு ஏலம் விடும் தீர்மானம் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. முத்தண்ணன் குளம் பகுதியில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து turf மைதானத்தை தனியாருக்கு ஏலம் விடும் தீர்மானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சாந்தி எதிர்ப்பை மீறியும் நிறைவேற்றப்பட்டது.