கோவை சாய்பாபா காலனி அருகே சண்முகா நகரில், ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு முன் இருந்த குப்பைகளை எதிர் வீட்டின் முன் தள்ளிய சம்பவம் சிசிடிவி காட்சிகளாக பதிவாகி வைரலாகி வருகிறது. அப்பகுதி மக்கள் இது குறித்து தெரிவிக்கையில், அந்த குடும்பம் அடிக்கடி இவ்வாறு குப்பைகளை மற்ற வீடுகளுக்கு தள்ளி விடுவதாகவும், இதனால் சண்டைகள் ஏற்படுவதாகவும் கூறினர். தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றாமல் இவ்வாறு செய்வது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.