கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வைப்பு நிதிப் பத்திரம் பெற்ற பின்பும் 18 வயதைக் கடந்தும் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்காத பயனாளிகள் விவரங்கள் coimbatore.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஊரக பகுதிகளில் உள்ள பயனாளிகள், தங்களது வைப்பு நிதி பத்திரத்துடன் அருகிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறப் பயனாளிகள் தங்களது மண்டல அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம். 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், வைப்பு நிதி பத்திரத்தின் அசல் மற்றும் நகல், கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.