கோவை: கிராமோத்சவம்- சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

61பார்த்தது
கோவை: கிராமோத்சவம்- சேவாக் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
கோவை, ஈஷா அறக்கட்டளையின் 16-வது கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலந்து கொள்கிறார். தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் இருந்து 5000 அணிகள் மற்றும் 43144 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற முதல் போட்டியில், 10311 பேர் கிராமப்புற பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபால், த்ரோபால் போன்ற விளையாட்டுகளில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்த விழாவில் நாதஸ்வரம், தவில், சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், பொதுமக்களுக்கான ரங்கோலி, சிலம்பம் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இறுதியில் ஐந்து மாநிலங்களில் இருந்து தேர்வான அணிகளுக்கு லீக் போட்டிகள் வரும் 29ஆம் தேதி நடக்கிறது. இதன் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் கலந்து கொள்கிறார். ஈஷா கிராமோத்சவம், கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மனப்பான்மையை வளர்த்து, போதை பழக்கங்களிலிருந்து விடுபட உதவும் நோக்கில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கிராமப்புற பெண்களுக்கு விளையாட்டு மூலம் அதிகாரமளிக்கும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி