கோவை: பிளஸ்-2 மாணவர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்

84பார்த்தது
கோவை: பிளஸ்-2 மாணவர்களுக்கு குறைதீர்க்கும் முகாம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில், பிளஸ்-2 மற்றும் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் ஜூன் 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமை வகிக்கிறார்.

உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களும், தேவையான சான்றுகளும், அரசு உதவிகளும் முகாமில் வழங்கப்படும். மாணவர்கள் அரசு ஐ. டி. ஐ. , பாலிடெக்னிக் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கான தகவல்களும் கல்விக் கடன் உதவிகளும் பெறலாம் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி