கோவை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கடும் குளிர்ச்சியும், பனிமூட்டமும் நிலவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை பனிமூட்டம் நீடிப்பதால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மாலை 4 மணி முதலே இருள் சூழத் தொடங்குவதால் மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டியுள்ளது. வானிலை மையம் அடுத்த சில நாட்களுக்கும் இதே போன்ற குளிர்ச்சியான நிலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.