தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. இந்தநிலையில், நாளை (மே.24) தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், கரூர், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடி, மின்னல் பலத்தக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.