கோவை: புறநகரில் கனமழை - நிலத்தடி நீர் மட்டம் உயர்வு!

250பார்த்தது
கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, பூலுவபட்டி, விராலியூர், நரசிபுரம், வடவள்ளி, தடாகம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுவட்டாரக் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் நீர்மட்டம் 37.82 அடி வரை உயர்ந்துள்ளது. முழு கொள்ளளவான 44.61 அடி வரை நீர் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.