மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ்வரன் (27) தனது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தும் குறுந்தகவல்கள் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாதேஷ்வரன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.