கோவை: வருமான வரி மோசடி.. ரூ.24.80 கோடி அபராதம் 2 ஆண்டு சிறை

0பார்த்தது
கோவை: வருமான வரி மோசடி.. ரூ.24.80 கோடி அபராதம் 2 ஆண்டு சிறை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பயாஸ்அகமது, 2015-16 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய ரூ.24.80 கோடி வருமான வரியை செலுத்தாமல், முறைகேடாக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, அவரது வங்கி கணக்கை முடக்கியது. கோவை சி.பி.ஐ. தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், பயாஸ்அகமதுவுக்கு மோசடி செய்த தொகையையே அபராதமாக ரூ.24.80 கோடி விதித்தும், 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.