கோவையில் வானதி சீனிவாசன் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விசில் சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். ஆனால் எங்கள் வீட்டில் குக்கர் விசில் சத்தம் தான் கேட்கிறது. பிரேமலதா விஜயகாந்தின் சமீபத்திய முடிவு வருத்தமளிக்கிறது. டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல் இந்தியாவின் மரியாதையை குன்ற செய்துள்ளது. உலக அரங்கில் தொழில்துறை புரட்சியை முன்னெடுக்க இந்திய இளைஞர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். இதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறினார்.