கோவை: ஓடும் பேருந்தில் நகை பறிப்பு

83பார்த்தது
கோவை: ஓடும் பேருந்தில் நகை பறிப்பு
கோவை, பிரின்ஸ் காலனி, வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மனைவி சரோஜினி (60). இவர் கோவை வேளாண்கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுன் பஸ் ஏறி நேற்று லாலிரோட்டில் இறங்கினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி திடீரென காணாமல் போயிருந்தது. 

இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஓடும் பஸ்ஸில் அருகில் நின்ற பயணி அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி