கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தொடங்கிய தேரோட்டத்தில் பக்தர்கள் 'ரங்கா, கோவிந்தா' முழக்கங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டதுடன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.