கோவையில் சட்டவிரோதமாக கடத்தி விற்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை காவல்துறையினர் கன்னியாகுமரியில் மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட தாய் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துடியலூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். குழந்தையை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு விற்றது தெரியவந்தது. போலீசார் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டனர். கடத்தல் கும்பல் மற்றும் குழந்தையை வாங்கிய குடும்பத்தினரிடம் போலீசார் இன்று ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன், வடவள்ளியில் சட்டவிரோதமாக குழந்தை விற்கப்பட்ட வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், துடியலூரில் மற்றொரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.