கோவை: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

5பார்த்தது
கோவை: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
கோவில்பட்டியைச் சேர்ந்த குமார், தனது மனைவி கற்பகவள்ளி வேறொருவருடன் சென்றதால் ஆத்திரமடைந்து, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 10.07.2014 அன்று கத்தியால் குத்திக் கொலை செய்தார். தடுக்க வந்த அவரது நண்பரையும் காயப்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த கோவை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவகுமார், குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி