கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக பீளமேடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பீளமேடு மீனா எஸ்டேட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்,
சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இருவரை பிடித்து விசாரிக்கும் போது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவ சூரியன் (23), புளியகுளம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் (24), என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து, 200 கிராம் கஞ்சா, Alprazolam மாத்திரைகள்-40, Air tight cover -25 ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.