கோவைக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் மூன்று நாள் மாநாட்டை பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். இதையொட்டி, போலீசார் விரிவான பாதுகாப்பு ஒத்திகை மற்றும் கான்வாய் சோதனை ஓட்டம் நடத்தினர். மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு பணிகள், வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. விமான நிலையத்திலிருந்து மாநாட்டு வளாகம் வரை கான்வாய் செல்லும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.