கோவை: 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

1பார்த்தது
கோவையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மொத்தம் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 43,844 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீட்டு ஒப்பந்த கையெழுத்து விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிற்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி