சேலத்தில் பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அரசு மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசுக்கு அனுப்பிய திட்ட அறிக்கையில் குளறுபடிகள் இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், 20 லட்சம் மக்கள் தொகை விதி பூர்த்தி செய்யப்படாததால் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறினார்.