கோவை: பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பால் வியாபாரியிடம் மோசடி

1பார்த்தது
கோவை: பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பால் வியாபாரியிடம் மோசடி
கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், பெரியநாயக்கன்பாளையம் தேவம்பாளையத்தை சேர்ந்த பால் வியாபாரி கோவிந்தராஜ் அளித்த புகாரில், காமாட்சிபுரத்தை சேர்ந்த ராஜாராம் மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகவும் கூறி, முதலில் ரூ.6 லட்சமும், பின்னர் கடன் வாங்கி ரூ.64 லட்சமுமாக மொத்தம் ரூ.70 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். லாபமும், முதலீட்டுத் தொகையும் திருப்பித் தராமல், கோவிந்தராஜை மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் இது மோசடி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, ராஜாராம்-சௌந்தர்யா தம்பதியை போலீஸார் நேற்று கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி