கோவை கணுவாய் பகுதியில் நேற்று பயிற்சி இல்லாமல் நடத்துனர் மினி பேருந்தை ஓட்ட முயன்றதால் விபத்து ஏற்பட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை செல்லும் மினி பேருந்து கணுவாய் நிறுத்தத்தில் நின்றிருந்தது. ஓட்டுநர் இல்லாத நேரத்தில், நடத்துனர் டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, பின்னால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் அருகிலிருந்த பெட்டிக்கடையில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. முறையான பயிற்சி மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது ஆபத்தானது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கணுவாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.