கோவை: அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் ஆய்வு

0பார்த்தது
கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் பற்றாக்குறை, பழைய கட்டிடங்கள், கழிவறை பராமரிப்பு, குடிநீர் வசதி, நோயாளிகள் உறவினர்களுக்கான வசதிகள் போன்ற குறைகளை அவர் ஆய்வு செய்தார். தேவையான கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான திட்டங்கள் தயாராகி வருவதாகவும், லஞ்சம், அலட்சியம் போன்ற புகார்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திடீர் ஆய்வுகள் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கோவையில் மருத்துவம், போக்குவரத்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.