கோவை ராமநாதபுரத்தில் தனியாக வசித்த மூதாட்டி கோமதியை நகைக்காக கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில், சலவை தொழிலாளியான புதுமாப்பிள்ளை ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மூதாட்டியின் தங்க நகைகளை கொள்ளையடித்து, அவற்றை ரூ. 2 லட்சத்திற்கு விற்று, அந்த பணத்தில் மனைவி லாவண்யாவுடன் ராமேஸ்வரம் சுற்றுலா சென்றபோது போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.