கோவை வடக்கு தொகுதியில், தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுக இந்த முறை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. பாஜகவின் வானதி சீனிவாசன் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் துறை செந்தமிழ் செல்வன், நாம் தமிழர் கட்சியின் நர்மதா, தமிழக வெற்றிக் கழகத்தின் சம்பத்குமார் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். கோவை தெற்கில் போட்டியிடும் திமுகவின் செந்தில் பாலாஜி, வடக்கு தொகுதியையும் குறிவைத்திருப்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.