இருகூர் பகுதியில் நேற்று (நவ., 06) மாலை காரில் வந்த சிலர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றதாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் கூறுகையில், சிசிடிவியில் காரின் பதிவெண் தெளிவாக தெரியவில்லை என்றும், காரும் வேகமாக நகர்ந்ததால் பெண் காரினுள் இருந்ததற்கான ஆதரமும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். எந்த ஒரு புகாரும் இதுவரை பதிவாகவில்லை என்றும், காரை அடையாளம் கண்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.