கோயம்புத்தூர் தடாகம் சாலையில் உள்ள கோவில்மேடு அருகே கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில் நேற்று ஆரஞ்சு நிறத்தில் தவளை ஒன்று தென்பட்டதால் அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படும் தவளைகள் மத்தியில் ஆரஞ்சு நிறத்தில் தவளை தென்பட்டது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வயலில் இருந்த அந்த தவளை தத்தித் தத்தி செல்வதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
மேலும் சிலர் அந்த தவளையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.