கோவை விமான நிலையத்தில் போலீஸ் எஸ்காட் பாதுகாப்புடன் வந்த தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசினார். மக்கள் ஆதரவால் தான் வெற்றி கிடைத்ததாகவும், தியாகத்தால் வளர்ந்த அதிமுக தற்போது தடுமாறுவதாகவும் அவர் கூறினார். ஒரு ரூபாய் செலவில்லாமல் முதல் தேர்தலில் வெற்றி பெற்றது சரித்திரம் எனவும், தலைவர் மனிதநேயம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் நல்ல ஆட்சி வழங்குவார் எனவும் தெரிவித்தார்.