கோவை: வேட்டையன் யானை – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

0பார்த்தது
கோவை மாவட்டம் தடாகம், பன்னிமடை பகுதியில் 'வேட்டையன்' என்ற ஒற்றைக் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று இரவு பன்னிமடை பூவரசமரத் தோட்டம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புகுந்த யானையை கண்ட நாய்கள் குரைத்ததால், ஆத்திரமடைந்த யானை நாய்களை துரத்தி, மாட்டுத் தொழுவத்தில் புகுந்து தீவனங்களை தின்று சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.