தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து கொல்லம் வரை போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் – கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07193) பிப்ரவரி 28 முதல் மார்ச் 28 வரை சனிக்கிழமைகளில் இரவு 11. 10 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 7. 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லம் – ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்: 07194) மார்ச் 2 முதல் 30 வரை திங்கள்கிழமைகளில் இரவு 10. 45 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5. 30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.