பிரதமர் நரேந்திர மோடி, கொடிசியாவில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டைத் துவக்கி வைக்க நாளை கோவை வருகிறார். இதையொட்டி, நாளை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக திருப்பி விடப்படும். இலகுரக வாகனங்கள் மாற்று வழிகளில் அனுமதிக்கப்படும். விமான நிலையத்திற்கு வருவோர் 12 மணிக்குள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.