கோவை: பணி நிரந்தரம் கோரி பேராசிரியர்கள் போராட்டம்!

1பார்த்தது
தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஊதியம் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ரூ. 15,000 வழங்கப்பட்ட ஊதியம் தற்போது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டாலும், ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவது, விடுப்புக்கே சம்பள பிடித்தம், மகப்பேறு விடுப்பு சலுகைகள் இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 57,800 வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், பணி நிரந்தரம் வரை குறைந்தது உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி