கோவை ஈஷா யோகாவில் பிப்ரவரி 15 அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 32வது மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். விழாவில் தியானம், மந்திர உச்சாடனம், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சத்குரு முன்னிலையில் ஆதியோகி சிலை அருகே யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் நடைபெறும். வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.