கோவை: புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு!

புதிய ஆண்டை வரவேற்கும் விழாக்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு காவல்துறை மற்றும் வனத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அனைத்து தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களும் தங்கள் நிகழ்ச்சி விவரங்கள், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். மேடை உறுதித்தன்மை சான்று, சிசிடிவி கேமரா பொருத்துதல், கூட்டத்தை கட்டுப்படுத்த தனியார் காவலர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
பங்கேற்பாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். ஆபாச நடனங்கள், போதைப் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. உயிர் பாதுகாப்பு கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். போதையில் நீச்சல் அனுமதிக்கக் கூடாது. ரிசார்ட்களில் அதிக ஓசை எழுப்பும் நிகழ்ச்சிகள் தடை.
பட்டாசுகள் வெடித்தல், தீ மூட்டுதல் முற்றிலும் தடை. இரவு 7:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் ரிசார்ட் வெளிப்பகுதியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் தடை. வனப்பகுதிகளில் வாகனங்கள் இயக்குவது தடை. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.