கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் பண்ணைகளில் பல்வேறு வகையான மூலிகை மற்றும் பழ நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆனைக்கட்டி மற்றும் கண்ணம்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் எலுமிச்சை, மாதுளை, கொய்யா, மா, பாக்கு, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ நாற்றுகள் விற்பனைக்கு உள்ளன. இதேபோல், சூலூர் கண்ணம்பாளையம் பண்ணையில் புளி, கொடுக்காப்புளி, நாவல், அலங்காரச் செடிகள், மூலிகை நாற்றுகள், தென்னை நாற்றுகள், உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லிகள் என பல்வேறு விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனைமலை ஆழியார் நகரில் உள்ள மாநில தென்னை நாற்றுப் பண்ணையிலும் தென்னை நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.